சிம்புவின் அடுத்த படத்தில் கார்த்திக் பட நாயகி.! யார்.?
சிம்புவின் அடுத்த படத்தில் கார்த்திக் பட நாயகி.! யார்.?;
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இந்நிலையில் அவர் உடல் எடையைக் குறைத்து அதிக படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சிம்புவின் அடுத்த படத்தின் டைட்டில் 'பத்து தல' என்றும் இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான "முஃப்தி" என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்றும், இந்தப் படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்புவுடன், கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' மற்றும் கார்த்திக் நடித்த கடைக்குட்டி சிங்கம் உள்பட ஒருசில படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பிரியாபவானிசங்கர் இணைய உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்க இருப்பதாக இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இந்த படத்தில் தாசில்தார் கேரக்டருக்கு ஒரு தமிழ் பெண்ணை தேடிக் கொண்டிருந்தேன் என்றும், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள தாசில்தார் கேரக்டருக்கு பிரியா பவானி சங்கர் பொருந்துவார் என்று முடிவு செய்தேன் என்றும், அவருடைய முந்தைய படங்களை பார்த்தபோது அவருடைய இயற்கையான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது என்றும், எனவே அவரை இந்த கேரக்டருக்கு தேர்வு செய்தேன் என்றும் இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் தாசில்தார் கேரக்டர் மிகவும் போல்டான, தன்னிச்சையாக முடிவு எடுக்கும் ஒரு கேரக்டர் என்றும் இந்த கேரக்டர் பிரியாவுக்கு நல்ல புகழை பெற்று தரும் என்றும் அவர் மேலும் கூறினார். பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து சிம்புவின் கேரக்டருக்கு ஜோடி இல்லை என்றாலும் தமிழ் ரீமேக்கில் அவருக்கு ஜோடி இருக்குமா அப்படியே இருந்தால் அந்த கேரக்டரில் நடிப்பது யார் என்பதை பார்ப்போம்.