அற்புதம்மாளுக்காக ட்விட்டரில் குரல் கொடுத்த கார்த்திக்சுப்புராஜ்.!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைதண்டனை பெற்றுவரும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தனது மகனை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

Update: 2021-06-11 06:57 GMT

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைதண்டனை பெற்றுவரும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தனது மகனை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இது பற்றி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் எனது மகன் 30 ஆண்டுகாலம் சிறையிலேயே கழித்துவிட்டார். அவர் குற்றவாளி இல்லை என்று ஐபிஎஸ் அதிகாரியான தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார. அவருக்கு சிறுநீரக கோளாறு உள்ளது. எனவே மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. தற்போது சிறையில் அந்த வசதி கிடைப்பதில்லை.

தனது வாழ்வின் பெரும்பகுதியை அவர் சிறைச்சாலையிலேயே கழித்துவிட்டார். எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரீ ட்வீட் செய்துள்ளார். 31 ஆண்டுகாலமாக போராடும் இந்த தாயின் நீதிக்கு மிக நீண்ட காலம் என்று பதிவிட்டுள்ளார்.

Similar News