கவிப்பேரரசு வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி - காரணம் தெரியுமா.?

கவிப்பேரரசு வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி - காரணம் தெரியுமா.?;

Update: 2020-12-16 16:37 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும், கவிஞருமான கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து சற்று முன்னர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. "இதயநோய்" பிரச்சனைக்காக உள்நோயாளியாக வைரமுத்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வைரமுத்துவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை அடுத்து திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வைரமுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியை அடுத்து பிரபல இயக்குனர் சீனு ராமசாமி அவரது டுவிட்டரில் கூறியதாவது: கவிப்பேரரசே கள்ளிக்காட்டின் இதிகாசமே இதயநலத்துடன் திரும்பி வருக.மகா பெரியவரையும் முருக கடவுளையும் துணைக்கு அழைக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News