திருமணம் குறித்து கயல் 'ஆனந்தி' வெளியீட்ட தகவல்!

திருமணம் குறித்து கயல் 'ஆனந்தி' வெளியீட்ட தகவல்!;

Update: 2021-01-10 17:45 GMT

தமிழ் சினிமாவில் கயல் என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஆனந்தி. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சண்டிவீரன், பொறியாளன் த்ரிஷா இல்லைனா நயன்தாரா, விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஆனந்தி. தற்போது இவர் டைட்டானிக் காதலும் கடந்து போகும், அலாவுதீனும் அற்புத கேமரா, ராவண கூட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஆனந்தி இணை இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மணமகன் சாக்ரடீஸ் இயக்குனர் நவீன் மனைவியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணம் குறித்து நடிகை ஆனந்தி கூறியது: நானும் சாக்ரடீஸூம் நான்கு வருடங்களாக காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டியதை அடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். அதன்படி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்.


 

திருமணத்திற்குப் பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதற்கு என் கணவரும் ஏற்கனவே சம்மதம் தெரிவித்து உள்ளார். தற்போது நான் நான்கு படங்களில் நடித்து வருகிறேன். அந்த படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு புதிய படங்கள் வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன் என்று கூறியுள்ளார். நடிகை ஆனந்தியின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவுக்கு ரசிகர்கள் அனைவரும்  வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News