கே.ஜி.எஃப்., 2வது பார்ட்.. மலையாள உரிமையை கைப்பற்றிய நடிகர் பிரித்விராஜ்.!

கே.ஜி.எஃப்., 2வது பார்ட்.. மலையாள உரிமையை கைப்பற்றிய நடிகர் பிரித்விராஜ்.!;

Update: 2021-01-05 14:07 GMT

விரைவில் திரைக்கு வர தயாராக உள்ள ‘கே.ஜி.எஃப் 2’ மலையாள உரிமையை நடிகர் பிரித்விராஜ் கைப்பற்றியுள்ளார். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கன்னடத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது.

இதனைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி அதிலும் வெற்றியடைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து ’கே.ஜி.எஃப் 2’ படக்குழு தற்போது உற்சாகமுடன் அறிவித்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், கே.ஜி.எஃப் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்த நிலையில், அதன் டீசர் யஷ் பிறந்தநாளான ஜனவரி 8ம் தேதி காலை 10:18 மணிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீல் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், நடிகர் பிரித்விராஜ் “நான் கே.ஜி.எஃப் படத்தின் மிகப்பெரிய ரசிகன் என கூறியுள்ளார். நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டப் படங்களில் ஒன்றை நான் வழங்குவதற்கான பாக்கியத்தைப் பெறுவதை பெருமையாக நினைக்கிறேன். பிரித்விராஜ் புரடொக்ஷன் ‘கே.ஜி.எஃப் 2’ வழங்குவதை பெருமைக்கொள்கிறது.

உங்களைப் போன்று லட்சக்கணக்கான ரசிகர்கள் போலவே நானும் ராக்கியை காண ஆவலில் இருக்கிறேன் என்று உற்சாகமுடன் குறிப்பிட்டுள்ளார்.

Similar News