சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது, இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.
இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் 169-வது படத்தை 'பசங்க' படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.