லேடி சூப்பர் ஸ்டாரின் புதிய படம் அறிவிப்பு - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

நயன்தாராவின் புதிய படத்தை பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது

Update: 2023-10-06 11:00 GMT

நயன்தாரா நடித்த ஜவான், இறைவன் படங்கள் திரைக்கு வந்துள்ள நிலையில் அடுத்த புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்துக்கு 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 76-வது படம் நயன்தாராவுடன் யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிருஷ்ணன், நரேந்திர பிரசாத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு கதை எழுதி டியூட் விக்கி டைரக்ட் செய்கிறார். பிரின்ஸ் பிக்சர் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். இணை தயாரிப்பை ஏ. வெங்கடேஷ் கவனிக்கிறார்.படத்தின் முதல் தோற்ற போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

SOURCE :DAILY THANTHI

Similar News