தலைவி படம் நிறைவு.. படக்குழு தகவல்.!

தலைவி படம் நிறைவு.. படக்குழு தகவல்.!;

Update: 2020-12-16 19:17 GMT

கருப்பு எம்.ஜி.ஆர்., என்று விஜயகாந்த் சொல்லி முடித்திருக்கும் நிலையில், எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசு நான் என்று கமல்ஹாசன் தெரிவித்து வருகிறார்.

மேலும், எம்.ஜி,.ஆரின் நல்லாட்சி என்று ரஜினி தரப்பினரும் சொல்லி வருகின்ற நிலையில், எம்.ஜி.ஆருக்கு நெருங்க முயற்சி செய்தேன் என்று நடிகர் அரவிந்த் சாமி கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார் இயக்குநர் விஜய். 
ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.

இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர்., கேரக்டரில் நடிகர் அரவிந்த் சாமி நடித்து வருகிறார். நேற்றுடன் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
 

Similar News