பிக்பாஸ்க்கு அதிரடியாக நுழைந்த முன்னணி நடிகர்!

பிக்பாஸ்க்கு அதிரடியாக நுழைந்த முன்னணி நடிகர்!;

Update: 2020-12-27 16:05 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. அந்த வகையில் தற்போது பூமி படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இப்படத்தின் புரமோஷன் காரணமாக அவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளார் என்ற தகவல் கசிந்தது. இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜெயம் ரவியை பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

முதலில் கமல்ஹாசனை சந்தித்துவிட்டு அதன்பின்னர் அகம்டிவி மூலம் போட்டியாளர்களை சந்தித்துப் பேசும் ஜெயம் ரவி, இந்த வின்னிங் டைம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். இறுதி போட்டி நெருங்கிவிட்டது. அனைவரும் சூப்பராக விளையாடுகிறீர்கள், பயங்கரமாக இருக்கிறது, செம எண்டர்டெயினிங் ஆக இருக்கின்றது. உங்களுடைய உண்மையான திறமையை நீங்கள் எப்போதும் போல் காட்டினாலே போதும், உங்களை அங்கிருந்து தெரியுமா என்பது தெரியவில்லை. ஆனால் நாங்கள் வெளியில் இருந்து வேற மாதிரி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சின்சியராக விளையாடுகிறீர்கள் என்பது எங்களுக்கு தெரிகிறது என்று கூறினார்.

அப்போது கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரெகுலரா பார்க்கிறீர்களா என்று கேட்டபோது சார் நீங்கள் எது செய்தாலும் நான் பார்ப்பேன், ஏனெனில் நான் உங்களுடனே வெறித்தனமான பக்தன் என்று கூறுவதுடன் இன்றைய முதல் ப்ரோமோ முடிவடைகிறது. கமல்ஹாசனுடன் பேசிக்கொண்டிருக்கும். ஜெயம்ரவி, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களை நேரில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கொரோனா காரணமாக அவர் செல்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


 


 


 

Similar News