விஷ்ணுவிஷாலின் படத்தில் இணைந்த முன்னணி நடிகை..!

விஷ்ணுவிஷாலின் படத்தில் இணைந்த முன்னணி நடிகை..!;

Update: 2021-02-11 16:17 GMT

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிகுழு என்ற  படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால்.  அதன்பின் ஏராளமான படங்கள் நடித்து வெற்றி வாகை சூடியவர்.இந்நிலையில் இவர்  காடன், எப்.ஐ.ஆர், ஜெகஜ்ஜால கில்லாடி மற்றும் மோகன்தாஸ் ஆகிய ஐந்து படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். இவற்றில் காடன் படத்தின் ரிலீஸ் தேதி மார்ச்-26 என்றும் அறிவிக்கப்பட்டது.

இதில் தற்போது விஷ்ணுவிஷாலின் மோகன்தாஸ் படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று தற்போது வந்துள்ளது. விஷ்ணு விஷால் நடிப்பில் முரளி கார்த்திக் இயக்கத்தில் உருவாகிவரும் 'மோகன்தாஸ்' திரைப்படத்தில் நடிகை ஷரவந்தி சாய்நாத் என்பவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இவர் விக்ரம் நடித்துவரும் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.


 

தற்போது மோகன்தாஸ் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ்  இணைந்துள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இப்படத்தின் படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளனர்.

Similar News