அருண்விஜய் படத்தில் கதாநாயகியாகும் முன்னணி நடிகை! யார் தெரியுமா?

அருண்விஜய் படத்தில் கதாநாயகியாகும் முன்னணி நடிகை! யார் தெரியுமா?;

Update: 2021-01-25 16:54 GMT

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருபவர்கள் நடிகர் அருண்விஜய். இவர் பல படங்களில் நடித்து அப்படங்கள் வெற்றி வாகை சூடியது.இந்நிலையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. முதல்கட்டமாக இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து தேர்வுகள் நடைபெற்று வருகிறது. 

எனவே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் இந்த பேச்சுவார்த்தை முடிந்து தற்போது பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சில நாட்களில் வெளிவரும் என்றும் தெரிகிறது.

அதிரடி ஆக்ஷன் படமாகவும்,அருண் விஜய் நடிக்க இருக்கும் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் இணைந்துள்ளது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே அருண்விஜய் நடித்த 'மாஃபியா' படத்தில் ப்ரியா பவானிசங்கர் நடித்த நிலையில் மீண்டும் அவருடன் இந்த படத்தின் மூலம் இணைகிறார் என்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பவானி சங்கர் கமலஹாசன் நடிக்கும்  'இந்தியன் 2' மற்றும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்' மற்றும் சிம்பு நடிக்கும் 'பத்து தல'  ஆகிய படங்களில் கமிட்டாகி உள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

Similar News