பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் காலமானார்.!
பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் காலமானார்.!;
பிரபல பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் ப்ளம்பர் 91 வயது முதிர்வு காரணமாக காலமானார். இவர் டிசம்பர் 13, 1929ம் ஆண்டு கனடாவில் பிறந்தவர் ஆவார். இவர் நடித்த படங்களுக்காக ஆஸ்கர் விருது பெற்றுள்ளார்.
மேலும், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர்.The sound of Music, All The Money in the World, Beginners, The insider, The Exception, 12 Monkeys, Remember உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது சாதனையை போற்றும் வகையில், டோனி விருது, அகாடமி விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவு ஹாலிவுட் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு முன்னணி நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.