லதா மங்கேஷ்கர் மறைவு செய்தியால் கடும் வேதனை அடைந்தேன்: பிரதமர் மோடி!

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் 92, உடல் நலக்குறைவால் மும்பையில் காலமானார்.

Update: 2022-02-06 05:20 GMT

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் 92, உடல் நலக்குறைவால் மும்பையில் காலமானார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த பாலிவுட் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த 70 வருடங்களாக இந்திய சினிமாக்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அனைத்து மொழிகளிலும் பாடலை பாடி சாதனை படைத்துள்ளார். இதுவரையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றுக்கு லதா மங்கேஷ்கர் ஆளானார். இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: லதா மங்கேஷ்கர் மறைவு செய்தியை அறிந்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு கடும் வேதனையில் உள்ளேன். யாராலும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை லதா மங்கேஷ்கர் விட்டு சென்றுள்ளார். இந்திய கலாச்சாரத்தின் தலைசிறந்த வீராங்கனையாக நினைவுகூரப்படுவார். அவரது மிகவும் இனிமையான குரலால் மக்களை கவர்ந்திருந்தார். இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source,Image Courtesy: Twiter


Tags:    

Similar News