சின்னத்திரை நடிகை சித்ரா மரணம்.. சி.பி.சி.ஐ.டி., விசாரணைக் கோரி மனு.!
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம்.. சி.பி.சி.ஐ.டி., விசாரணைக் கோரி மனு.!;
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை அருகே உள்ள தனியார் சொகுசு ஓட்டலில், கடந்த 9ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சித்ரா உயிரிழந்த அன்று அவருடன் இருந்த கணவர் ஹேமந்த்தை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையின்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், உரிய குற்றவாளியை கண்டுபிடிக்குமாறு ஹேமந்தின் தந்தை தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனிடையே சித்ராவின் தற்கொலை வழக்கை கையில் எடுத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ., இந்த வழக்கு தொடர்பாக பல தரப்பினரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணை முடிவுகள் அனைத்தும் ஹேமந்த்துக்கு எதிராகவே இருப்பதாக தெரிகிறது. இன்று 250 பக்க விசாரணை அறிக்கையை ஆர்.டி.ஓ., திவ்யஸ்ரீ நசரத்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
சித்ரா உயிரிழந்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும், இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், இன்னும் யார் யார் குற்றவாளி என்பது தெரியவில்லை.
இந்நிலையில், ஹேமந்த் தான் சித்ராவை கொலை செய்து விட்டு தற்கொலை என சித்தரித்ததாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்த சித்ராவின் தாயார், வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். தற்போது மீண்டும் நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.