ஹீரோவாகும் லோகேஷ் கனகராஜ் , அனிருத்

இசையமைப்பாளரான அனிருத் மற்றும் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் விரைவில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2023-04-17 08:00 GMT

மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் 'லோகேஷ் கனகராஜ்'. அடுத்ததாக கைதி, மாஸ்டர் ,விக்ரம் படங்களை இயக்கிய வெற்றிகரமான இயக்குனரானார்.தற்போது நடிகர் விஜயை வைத்து 'லியோ' படத்தை இயக்கி வருகிறார் . அந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்நிலையில் 'லோகேஷ் கனகராஜ்' மற்றும் 'அனிருத்' இணைந்து புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்தப் படத்தினை தேசிய விருது வென்ற பிரபல சண்டை பயிற்சி இயக்குனர்களான அன்பறிவ் இரட்டையர்கள் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது .பயங்கர ஆக்ஷன் கதையாக இப்படம் உருவாக உள்ளதாம். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் சமுத்திரகனி தனது டுவிட்டர் பக்கத்தில் அன்பறிவ், லோகேஷ் கனகராஜ், அனிருத் படங்களை பகிர்ந்து 'வாழ்த்துக்கள் செல்லங்களே' என பதிவிட்டுள்ளார் .விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

Similar News