தமிழிலும் வெளியாகும் மகேஷ்பாபுவின் 'சர்க்காரு வரி பாட்டா'
மகேஷ்பாபுவின் சர்க்கார் வாரி பட்டா தமிழிலும் வெளியாக பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மகேஷ்பாபுவின் சர்க்கார் வாரி பட்டா தமிழிலும் வெளியாக பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தெலுங்கின் முன்னணி நடிகர் மகேஷ்பாபு தற்பொழுது பரசுராம் இயக்கத்தில் 'சர்க்காரு வரி பாட்டா' என்ற படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் இந்த படத்தின் வெளியீடு வருகிற மே மாதம் 12'ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமன் இசையமைக்கும் இந்த படத்தை தமிழிலும் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியானது. ஆனால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 'சர்க்காரு வரி பாட்டா' படம் தமிழில் நல்ல வரவேற்பை பெறும் என மகேஷ்பாபு தரப்பு மிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழில் படத்தை வெளியிடுகிறது.