மலையாளத்தில் ரீ-எண்ட்ரிக்கு தயாரான அரவிந்த்சாமி !

Breaking News.

Update: 2021-09-14 09:15 GMT

தமிழைப்போலவே மலையாளத்திலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு ரீ-என்ட்ரி குடுக்கவுள்ளார் நடிகர் அரவிந்த்சாமி.




 


நடிகர் அரவிந்த்சாமி தமிழில் பல வருடங்களாக நடிக்காமல் இருந்து மீண்டும் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் ரீ-எண்ட்ரி குடுத்தார். தற்பொழுது கைவசம் 'சதுரங்க வேட்டை 2', 'வணங்காமுடி', 'நரகாசூரன்', 'கள்ளபார்ட்' ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இப்படங்களின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.




 


இதேபோல் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான 'தேவராகம்' எனும் மலையாள படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு மலையாளத்தில் நடிக்கவே இல்லை! இந்நிலையில் மீண்டும் புதிதாக மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'ஒட்டு' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் குஞ்சக்கோ போபன் உடன் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Tags:    

Similar News