தஞ்சையில் மணிரத்தினம் வெளியிடும் 'பொன்னியின் செல்வன்' டீசர்

தஞ்சாவூரில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசரை வெளியிட மணிரத்னம் தரப்பு முடிவு செய்துள்ளது.

Update: 2022-06-10 05:37 GMT

தஞ்சாவூரில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசரை வெளியிட மணிரத்னம் தரப்பு முடிவு செய்துள்ளது.




கல்கி எழுதிய சரித்திர நாவல் 'பொன்னியின் செல்வன்' இதனை தற்போது மணிரத்னம் அதே பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார். இதன் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிஷா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.





இந்நிலையில் படத்தின் டீசரை அடுத்த மாதம் தஞ்சாவூரில் பொதுமக்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெறும் விழாவில் வெளியிட இருக்கிறார் மணிரத்னம். மேலும் பட புரமோஷனுக்காக பல ஊர்களிலும் பயணம் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

Similar News