தடுப்பூசி பற்றி வதந்தி பரப்பிய மன்சூர் அலிகான்.. முன்ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.!
மன்சூர் அலிகானை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.;
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மனுத்தாக்கல் செய்துள்ளார். நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் இறந்து போனார் என்று நடிகர் மன்சூர் அலிகான் பேசினார். இவரது பேச்சால் சாதாரண மக்களுக்கு தடுப்பூசி மேல் இருந்த நம்பிக்கை இழக்கும் வகையில் இருந்தது.
இதனால் மன்சூர் அலிகானை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் மன்சூர் அலிகான் மீது வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், மீண்டும் முன் ஜாமீன் கேட்டு, நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். விரைவில் இந்த மனு மீது விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.