மாளவிகா மோகனுடன் மீண்டும் மாஸ்டர் பட வில்லன்.!

மாளவிகா மோகனுடன் மீண்டும் மாஸ்டர் பட வில்லன்.!;

Update: 2020-12-20 17:02 GMT

கொரோனா ஊரடங்கு முன்னரே மாஸ்டர் முடிக்கப்பட்டு தயாராக இருந்த நிலையில்  தற்போது விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நாயகியாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்தது.

இந்த நிலையில் மாளவிகா மோகனன் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 'மாஸ்டர்' படத்தை அடுத்து ஹிந்தியில் ஒரு வெப்தொடரில் மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாகவும் இந்த தொடரின் நாயகனாக சாஹித் கபூர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்தது.

தற்போது இந்த வெப்தொடரில் ஒரு முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. எனவே 'மாஸ்டர்' படத்தை அடுத்து மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த தொடர் அமேசான் ஓடிடி தளத்தில் அடுத்த ஆண்டு ஒளிபரப்பாக உள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


 


 

Similar News