இணையத்தில் வெளியான மாஸ்டர்.. அதிர்ச்சியில் படக்குழு.!
இணையத்தில் வெளியான மாஸ்டர்.. அதிர்ச்சியில் படக்குழு.!;
விஜய் நடித்த மாஸ்டர் படம் இணையத்தில் வெளியாகியிருப்பது படக்குழுவுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் இன்று ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
படம் வெளியாவதற்கு முன்னர் இந்தப் படத்தின் காட்சிகள் முன்னர் இணையத்தில் கசிந்த நிலையில், படக்குழு அந்தக் காட்சிகளை ஷேர் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், தற்போது மாஸ்டர் படம் சமூக வலைதள செயலியான டெலிகிராமில் வெளியாகியுள்ளது. இதனால் மாஸ்டர் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.
காலையில் படம் திரைக்கு வந்த நிலையில் மதியம் இணையத்தில் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மட்டுமின்றி தயாரிப்பாளருக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.