டொரோண்டோ திரைப்பட விழாவில் விருது பெற்ற 'மாயோன்' - எதற்கு தெரியுமா?

டொரோண்டோ திரைப்பட விழாவில் சிறந்த புராண படம் என்ற விருதை மாயோன் திரைப்படம் பெற்றுள்ளது.

Update: 2022-09-17 12:25 GMT

டொரோண்டோ திரைப்பட விழாவில் சிறந்த புராண படம் என்ற விருதை மாயோன் திரைப்படம் பெற்றுள்ளது.






கனடாவில் உள்ள டொரோண்டோ நகரில் கடந்த 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை 47 வது சர்வதேச திரைப்பட விழா நடந்தது. பல நாடுகளில் இருந்து பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் இந்தியாவில் இருந்து புராணங்களுக்கான திரைப்பட பிரிவில் தமிழில் தயாரிக்கப்பட்ட மாயோன் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்னர் சிறந்த புராண படத்துக்கான விருது வழங்கப்பட்டது.




 

இதுகுறித்து படத்திற்கு திரைக்கதை எழுதிய தயாரித்த மாணிக்கம் கூறியதாவது, மாயோன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு எங்களை மகிழ்ச்சி கொள்ள செய்தது. தற்போது மாயோன் திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்த்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது' என கூறினார். திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Similar News