நல்லபடியாக முடிந்தது மருத்துவ பரிசோதனை.. சென்னை திரும்பிய ரஜினிகாந்த் தகவல்.!
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் பின்னர் ஆண்டுக்கு ஒருமுறை அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்வார். ஆனால் கடந்த ஆண்டு முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஜினி அமெரிக்கா செல்வதில் சிக்கல் நீடித்தது.;
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் பின்னர் ஆண்டுக்கு ஒருமுறை அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்வார். ஆனால் கடந்த ஆண்டு முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஜினி அமெரிக்கா செல்வதில் சிக்கல் நீடித்தது.
இதனிடையே, கடந்த 19ம் தேதி ரஜினி அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். நடிகர் தனுஷ் 'தி கிரே மேன்' என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடிப்பதற்காக அமெரிக்காவில் முகாமிட்டிருந்தார். அவருடன் அவரது மனைவி ஐஸ்வர்யா இருந்தார். இதனால் நடிகர் ரஜினியை கவனித்துக் கொண்டனர்.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி மயோ கிளினிக்கில் ரஜினி இறுதி மருத்துவ பரிசோதனை முடித்துக் கொண்டார். இதன் பின்னர் மீண்டும் இந்தியாவுக்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். அதன்படி அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக இன்று அதிகாலை சென்னை வந்தார் ரஜினி. அவரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இதன்பின்னர் செய்தியாள்களை சந்தித்த ரஜினி, மருத்துவ பரிசோதனை நல்லபடியாக முடிந்தது எனக் கூறினார். விரைவில் அண்ணாத்த படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.