ஆண்ட்ரியா பிறந்தநாளுக்கு மிஸ்கின் கொடுத்த இன்ப அதிர்ச்சி.!

ஆண்ட்ரியா பிறந்தநாளுக்கு மிஸ்கின் கொடுத்த இன்ப அதிர்ச்சி.!;

Update: 2020-12-21 15:59 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மிஸ்கின். இவர் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த 'பிசாசு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது 6 வருடங்கள் கழித்து 'பிசாசு 2' படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார் என்பது  குறிப்பிடத்தக்கது. 

பிசாசு முதல்பாகத்தில் பிரயாகா மார்டின் பிசாசாக நடித்த நிலையில் தற்போது பிசாசு 2 படத்தில் பூர்ணா பிசாசாக நடிக்க உள்ளார் என்றும், மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக வெளிவந்த நிலையில் இன்று ஆண்ட்ரியா அவரது பிறந்த நாளை கொண்டாடுவதை அடுத்தது பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது என்பதும், இதில் ஆண்ட்ரியாவின் அட்டகாசமான தோற்றம் காணப்படுகிறது. 


இந்த போஸ்டரை மிஸ்கின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் என்பதும், ஆண்ட்ரியாவிற்கு பிறந்தநாள்  வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்திருக்கிறார்.கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்பதும் இதில் ஒரு பாடலை சூப்பர் சிங்கர் டைட்டில் பட்டம் பெற்ற பிரியங்கா பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
 







 

Similar News