இந்தியாவிலேயே முழுவதும் தயாரான விக்ராந்த் கப்பலை பார்வையிட்ட மோகன்லால்
நடிகர் மோகன்லால் விக்ராந்த் போர்க்கப்பலை பார்வையிட்டு அதிகாரிகள், ஊழியர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
நடிகர் மோகன்லால் விக்ராந்த் போர்க்கப்பலை பார்வையிட்டு அதிகாரிகள், ஊழியர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
முதன்முதலாக இந்தியாவிலேயே தயாராகி உள்ள விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐ.என்.சி விக்ராந்த், கொச்சின் துறைமுகத்தில் நடைபெற்று வந்த இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இது இந்திய கடற்கரை வசம் ஒப்படைக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் இந்த கப்பலை மோகன்லால் பார்வையிட விருப்பம் தெரிவித்து அங்கு சென்றார், மோகன்லாலுடன் ராணுவ அதிகாரியும், திரைப்பட இயக்குனருமான மேஜர் ரவி கலந்து கொண்டார். இவர்கள் இருவரையும் கடற்படை அதிகாரிகள் வரவேற்று அந்த கப்பலை சுற்றி காண்பித்தனர்.