போதை பார்ட்டியில் கைதான மகனுக்கு மணியார்டர் அனுப்பிய நடிகர் ஷாருக்கான்!

கடந்த 3ம் தேதி மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2021-10-16 06:40 GMT
போதை பார்ட்டியில் கைதான மகனுக்கு மணியார்டர் அனுப்பிய நடிகர் ஷாருக்கான்!

கடந்த 3ம் தேதி மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து ஆர்யன் கான் ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன்கான் அங்குள்ள ஓட்டலில் செலவு செய்வதற்காக அவரது குடும்பத்தினர் ரூ.4,500 மணியார்டர் அனுப்பியுள்ளனர். இந்த தொகைக்கு மேலாக அனுப்புவதற்கு அனுமதி கிடையாது. இந்த தகவலை சிறை கண்காணிப்பாளர் நிதின் வேச்சல் கூறியுள்ளார்.

Source: Dinakaran

Image Courtesy:Navbharat Times


Tags:    

Similar News