#MoneyHeist5 வெப் தொடர் வெளியீடு தேதி அறிவிப்பு - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Update: 2021-05-25 10:00 GMT

#MoneyHeist வெப் தொடரின் 5 சீசனுக்கான வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டு ரசிகர்களிடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


தற்பொழுது திரையரங்கில் வெளியாகும் படங்களை விட ஓடிடி தளத்தில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதரவு பெருகி வருகிறது. அந்த வகையில்

நெட்ப்ளிக்ஸ்'ல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற வெப் சீரிஸ் "மனி ஹெய்ஸ்ட்".

இந்த வெப் தொடருக்கென உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வங்கிகளில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களை பற்றிய கதைதான் இந்த 'மனி ஹெய்ஸ்ட்' தொடர். இதுவரை, 4 சீசன்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு சீசனும் தலா 8 எபிசோடுகளைக் கொண்டது.


இந்நிலையில் 'மனி ஹெய்ஸ்ட்' வெப் தொடரின் 5-வது சீசன் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5-வது சீசன் இரண்டு பகுதிகளாக வெளியாக உள்ளது. முதல் பகுதி வருகிற செப்டம்பர் 3-ம் தேதியும், இரண்டாம் பகுதி டிசம்பர் 5-ம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான 4 சீசன்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், 5-வது சீசனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Similar News