இசை ஆல்பத்தின் வருமானத்தை திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு வழங்கும் இசையமைப்பாளர் தேவா
முருகன் ஆல்பத்தின் வசூலை திருச்செந்தூர் கோவிலுக்கு வழங்கவிருக்கிறார் இசையமைப்பாளர் தேவா.
முருகன் ஆல்பத்தின் வசூலை திருச்செந்தூர் கோவிலுக்கு வழங்கவிருக்கிறார் இசையமைப்பாளர் தேவா.
இசையமைப்பாளர் தேவா தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமானவர், 90'களில் இவரது இசை இல்லாமல் படங்கள் வெளிவராது அந்த அளவிற்கு பிரபலமாக இருந்தார் மேலும் இவர் மிகுந்த ஆன்மீக ஈடுபாடு உடையவர்.
இவர் தற்பொழுது 'கந்த முகமே' என்ற ஒரு பெயரில் முருகன் ஆர்வத்தை வெளியிட்டுள்ளார். இந்த நிலைகள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற இசையமைப்பாளர் தேவா அங்கு செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது, 'திருச்செந்தூர் முருக பெருமானுக்காக 'கந்த முகமே' என்ற பெயரில் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளேன். இந்த ஆல்பம் மூலம் கிடைக்கும் மொத்த பணத்தையும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வழங்கப் போகிறேன்' என தெரிவித்து இருக்கிறார் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.