இசையமைப்பாளர் கங்கை அமரன் மனைவி மரணம்: பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் இரங்கல்.!
கங்கை அமரன் மனைவி இறப்புக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.;
தமிழ் திரையுலகில் இசை கடவுள் என்று போற்றப்படும் இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும் விளங்கி வருபவர்.
இதனிடையே கங்கை அமரனின் மனைவி மணிமேகலை 69, உடல் நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கங்கை அமரன் மனைவி இறப்புக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரபல திரை இசையமைப்பாளரும் பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினருமான திரு.கங்கை அமரன் அவர்களின் துணைவியார் திருமதி.மணிமேகலை, நேற்று இரவு உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்துள்ளார்.
அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரை.இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.