'பழைய கேப்டனாக மீண்டு வாருங்கள்' - நண்பர் விஜயகாந்த்'திற்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்

'என் நண்பர் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்' என ரஜினிகாந்த் விஜயகாந்திற்கு நலம் பெற வாழ்த்தி உள்ளார்.

Update: 2022-06-22 04:48 GMT

'என் நண்பர் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்' என ரஜினிகாந்த் விஜயகாந்திற்கு நலம் பெற வாழ்த்தி உள்ளார்.



நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் வலது கால் விரல் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, மூன்று விரல்கள் சிகிச்சையில் நீக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும் தே.மு.தி.க சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது




 

இந்த நிலையில் பலரும் இது குறித்து அதிர்ச்சியும், விஜயகாந்த் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில் 'என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

Similar News