யாரோ செய்த தப்புக்கு என் மகன் கைது.. சித்ரா தற்கொலையில் நீடிக்கும் மர்மம்.!
யாரோ செய்த தப்புக்கு என் மகன் கைது.. சித்ரா தற்கொலையில் நீடிக்கும் மர்மம்.!;
யாரையோ காப்பாற்றுவதற்காக என் மகன் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிவதாக ஹேமந்த்தின் தந்தை ரவிச்சந்திரன் பேட்டியளித்துள்ளார்.
சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையை ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ., கையில் எடுத்துள்ளார்.
நேற்று சித்ராவின் தாய், தந்தை மற்றும் சகோதிரியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று காலை சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன் மற்றும் மாமியார் வசந்தா விசாரணைக்கு ஆஜரானார்கள். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேமந்த் நேற்று இரவு அதிரடியாக கைது செய்தது போலீஸ். அவரை நேரில் ஆஜர் படுத்துமாறு ஆர்.டி.ஓ., திவ்யா கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவிச்சந்திரன், யாரையோ காப்பாற்றுவதற்காக என் மகனை போலீஸ் கைது செய்திருக்கிறார்கள் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து, சித்ராவின் குடும்பத்திடம் எந்த வரதட்சணையும் கேட்கவில்லை என்றும் அது அவர்களுக்கே தெரியும் என்றும் கூறினார். மேலும், ஆர்டிஓ விசாரணையில் நடந்த உண்மையை எடுத்துக் கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது அவர் பெற்றோர் கூறிய கருத்து கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. அப்போ ஹேமந்த் குற்றவாளி இல்லை என்றால் யார் கொலை செய்ய தூண்டியிருப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனை முழுயை£க விசாரணை செய்த பின்னரே தெரியவரும். அதுவரை பொறுத்திருந்து பார்க்கலாம்.