விஜய் சேதுபதிக்கு பதில் எண்ட்ரி கொடுக்கும் நாக சைதன்யா.!

கடந்த 1994ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வசூலை குவித்த படம் ‘ஃபாரஸ்ட் கம்ப்’. இப்படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கான் நடிக்கிறார்.;

Update: 2021-03-17 11:42 GMT

கடந்த 1994ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வசூலை குவித்த படம் 'ஃபாரஸ்ட் கம்ப்'. இப்படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கான் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு 'லால் சிங் சட்டா' என்று பெரயிடப்பட்டுள்ளது. அமீர்கானுக்கு ஜோடியாக நடிகை கரீனா கபூர் நடிக்கிறார். இப்படத்திற்கு இந்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.




 


அமீர்கான் மற்றும் விஜய் சேதுபதி இரண்டு பேரும் ராணுவ வீரர்களாக நடிக்கின்றனர் என்று கூறப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்தப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி வெளியேறிவிட்டதாக சில மாதங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியது.


 



இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதிக்கு பதிலாக பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று பாலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Similar News