பரபரப்பை ஏற்படுத்தும் வாசகத்துடன் மாதவனின் புதிய படத்தின் போஸ்டர்

'ராக்கெட்ரீ ' நம்பி நாராயணன் படத்தின் புதிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-21 10:57 GMT

'ராக்கெட்ரீ ' நம்பி நாராயணன் படத்தின் புதிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 



நடிகர் மாதவன் நடித்து, இயக்கி, தயாரித்த படம் 'ராக்கெட்ரீ' விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை பயோபிக் ஆக எடுத்து வரும் மாதவன் இப்படத்தின் வெளியீட்டை மிக பிரமாண்டமாக நிகழ்த்த உள்ளார். ஏற்கனவே நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.




இந்நிலையில் நம்பி நாராயணன் புதிய போஸ்டரை வெளியிட்ட அவர் அதில், 'ஒரு சிறந்த விஞ்ஞானி உண்மையான தேசபக்தர் கண்ணிமைக்கும் நேரத்தில் வில்லனாக மாறிய கதை' என மாதவன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது, மேலும் அது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News