மலையாள படப்பிடிப்பு.. தனிவிமானத்தில் விக்னேஷ் சிவனுடன் பறந்த நயன்தாரா.!
கடந்த 2019ம் ஆண்டு ‘லவ் ஆக்ஷன் ட்ராமா’ என்ற படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து ‘நிழல்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இதனிடையே இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசிலுக்கு ஜோடியாக ‘பாட்டு’ படத்தில் நடித்து வருகிறார்.;
மலையாள படப்பிடிப்புக்காக தனி விமானம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா கொச்சின் பயந்துள்ளார். தமிழ் படங்களில் மட்டுமே அதிகமான கவனம் செலுத்தி வந்த நயன்தாரா தற்போது மலையாள படங்களிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு 'லவ் ஆக்ஷன் ட்ராமா' என்ற படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து 'நிழல்' என்ற படத்தில் நடித்திருந்தார். இதனிடையே இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசிலுக்கு ஜோடியாக 'பாட்டு' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் நயன்தாரா கொச்சின் சென்றடைந்தார். விமான பயணம் குறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.