பொன்னியின் செல்வன் படத்திற்கு எதிராக புதிய வழக்கு

மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்றது.

Update: 2023-01-26 12:17 GMT

மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாக தயாராகி கொண்டிருக்கின்ற நிலையில் சார்லஸ் அலெக்சாண்டர் என்ற சென்னை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்படத்திற்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அமரர் கைக்கு எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார் இப்படத்தில் அவர் வரலாற்றை திருத்தி இயக்கி உள்ளதாகவும் முக்கிய கதாபாத்திரமாக இப்படத்தில் இடம் பெற்றுள்ள வந்தியதேவன் பெயரை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.

உரிய ஆராய்ச்சிகளை வரலாற்று அடிப்படையில் படங்களை எடுப்பதற்கு முன்பு மேற்கொண்டு இருக்க வேண்டும் எனவும், கல்கி வரலாற்றில் உள்ள உண்மை பெயர்களை பயன்படுத்தும் நிலையில், சோழர்கள் போர் தந்திரங்களில் சிறந்து விளங்கியவர்கள் அவர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் மணிரத்னம் வரலாற்று திரித்துள்ளதாக அம்மனுவில் குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறைக்கு இந்த புகாரை அழித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Similar News