புதிய கட்சி தொடக்கம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இயக்குநர் சிகரம் இல்லத்திலிருந்து வந்த வாழ்த்து செய்தி.!
புதிய கட்சி தொடக்கம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இயக்குநர் சிகரம் இல்லத்திலிருந்து வந்த வாழ்த்து செய்தி.!;
தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்தவர் இயக்குநர் சிகரம் என்று அழைக்கப்படும் கே.பாலசந்தர் அவர்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடிக்கடி மேடை நிகழ்ச்சி மற்றும் சினிமா விழாக்களில் குறிப்பிடுவார்.
தான் பெரும் புகழோடும் நல்ல வசதியோடும் வாழ்கிறேன் என்றால் அதற்கு காரணம் கே.பாலசந்தர் சார்தான். அவர்தான் என்னுடைய மைன்ஸ் பாயிண்ட் எல்லாத்தையும் சரி செய்து எனக்குள் இருந்த பிளஸ் பாயிண்டுகளை வெளிக்கொண்டு வந்தார். என்னை சிறந்த நடிகராக உருவாக்கினார்.
4 படங்களில் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்து என்னை ஒரு நட்சத்திரமாகவும் ஆக்கியுள்ளார். கேபி சார் என்னை அறிமுகப்படுத்தவில்லை என்றாலும் நான் சினிமாவுக்கு வந்திருப்பேன். ஏதோ ஒன்று, இரண்டு, கன்னட சினிமாவில் நடித்துவிட்டு போயிருப்பேன். ஆனால், பாலசந்தர் சார் கொடுத்த நல்ல கேரக்டர்தான் என்னை இந்த உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது என ரஜினி பெருமிதமாக கூறுவார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேற்று கட்சி ஜனவரி தொடங்கப்படும் எனவும், அதற்கான பணிகள் நடைபெறுகிறது. இப்போ இல்லனா வேற எப்போ என்று அதிரடியான தனது கருத்துகளை பதிவிட்டார். மேலும், என் உயிரே போனாலும் தமிழ் மக்களுக்காக போகட்டும் எனவும் உருக்கமான வார்த்தைகளால் தெரிவித்திருந்தார். இது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மற்றவர்களையும் உருக வைத்தது.
இந்நிலையில், இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களின் கவிதாலாய என்ற நிறுவனத்தின் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: தற்போது அரசியலுக்கு வருவதாகவும் கட்சி தொடங்கப்போவதாகவும் அறிவித்திருப்பதால், ‘’எங்கள் சூப்பர் ஸ்டாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது ஆச்சரியமான பயணம். இந்த அரசியல் பயணத்தில் வெற்றியடைய விரும்புகிறோம்.’’ என்று வாழ்த்தியிருக்கிறது கவிதாலயா நிறுவனம்.