சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியீடு.!

சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியீடு.!;

Update: 2020-11-11 16:23 GMT

தமிழ் சினிமாவில் சிறுவயது முதலே பல படங்கள் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. தற்போது சுசீந்திரன் இயக்கி வரும் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார். ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .

இப்படத்திற்காக நடிகர் சிம்பு அவர் உடல்நிலை மிகவும் குறைத்து சாக்லேட் பாய் என்று மீண்டும் அழைக்கப்படுகிறார்.இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். தமன் இசையமைக்கிறார்.ஈஸ்வரன் படம் திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வேகமாக சூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது.இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படத்தை பற்றி அப்டேட்கள் நாளுக்கு நாள் தகவல் வந்து கொண்டேதான் இருக்கின்றன.இந்நிலையில் தற்போது சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் ஹீரோயினாக நடித்துள்ள நிதி அகர்வாலுடன் சிம்புவின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Similar News