சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்' படத்தின் நியூ அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்' படத்தின் நியூ அப்டேட்!

Update: 2021-01-25 17:20 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அந்தவகையில் இவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. எனவே தற்போது சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள படம் அயலான்.இப்படம் 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல்ப்ரீதி சிங் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களாக கருணாகரன், யோகிபாபு போன்ற நடிகர்களும்  நடிக்கின்றனர். இசைப்புயல் ஏர்.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா வைரஸ்  காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது தளர்வுகள் கொண்டு வரப்பட்ட பின் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதனால் கடந்த 2 மாதங்களாக படப்பிடிப்பில் தீவிரம் காட்டப்பட்டதை அடுத்து தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாகப் படக்குழு தெரிவித்து இருக்கிறது. ஆனால் படத்திற்கான கிராஃபிக்ஸ் வேலைகள் முடிய 10 மாதங்கள் ஆகும் என தெரிகிறது. அயலான் சையின்ஸ் பிக்ஷனாக எடுக்கப்பட்டு உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து உள்ளது. அதனால் படக்குழு கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அதற்காக தயார் செய்யப்பட்டு உள்ள கேக்கில் ஏலியன் இருப்பதோடு அந்த ஏலியன் கையில் லாலி பாப் வைத்து இருக்கிறது.

இந்தக் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது நெட்டிசன்கள்  #Ayalaan என்ற ஹேஷ்டேக் மூலம் வைரலாக்கி வருகின்றனர்.அதில் அயலான் Shoot wrapup என்றும் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. முழுமையான பணிகள் முடிந்து   கிறிஸ்துமஸுக்கு வெளியாகும் என்று தெரிகிறது.

Similar News