மாஸ்டர் திரைப்படத்தில் நியூ அப்டேட் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

மாஸ்டர் திரைப்படத்தில் நியூ அப்டேட் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!;

Update: 2020-12-16 16:48 GMT

மாஸ்டர் திரைப்படத்தின் அப்டேட்கள்  அவ்வப்போது வந்து கொண்டேதான் இருக்கின்றன.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான 'மாஸ்டர்' திரைப்படத்தின் டீசர் நவம்பர் 14ஆம் தேதி தமிழில்  வெளிவந்தது.

இந்த டீசர் யூடியூப் உள்பட சமூக வலைத்தளங்களில் மிகவும்  ட்ரெண்ட் ஆனது. மேலும்  பார்வையாளர்களின் எண்ணிக்கையில் பல்வேறு சாதனைகளை முறியடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்தநிலையில் 'மாஸ்டர்' திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வருவதாகவும் இதற்கான டப்பிங் பணிகளும் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

அந்த வகையில் தற்போது தமிழை அடுத்து தெலுங்கிலும் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என மாஸ் அறிவிப்பு ஒன்று சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து தெலுங்கு மாநிலங்களிலுள்ள தளபதி விஜய்யின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு டீசர் நாளை வெளியாக உள்ளதை அடுத்து இதுகுறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 


 

Similar News