தூக்கு போட்டதற்கான அடையாளம் இல்லை.. நடிகை சித்ரா மரணத்தில் வலுக்கும் சந்தேகம்.!
தூக்கு போட்டதற்கான அடையாளம் இல்லை.. நடிகை சித்ரா மரணத்தில் வலுக்கும் சந்தேகம்.!;
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா 28, சென்னையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்தி நடிகர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல் வெளியிட்டனர். சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், நடிகை சித்ரா சடலமாக மீட்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் அவர் கன்னத்தில் ரத்த காயம் உள்ளது. அதே சமயம் தூக்க போட்டதற்கான கழுத்தில் எந்த ஒரு அடையளமும் இல்லை. இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்று அவரது ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை முடிந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும்.
மேலும், விஜய் தொலைக்காட்சியின் ஒரு ஸ்பெஷல் ஷோவின் ஷூட்டிங் நேற்று சென்னையின் புறநகர்ப்பகுதியான நசரத்பேட்டையில நடந்தது. அதற்கான ஷூட்டிங்கில் சித்ரா கலந்துகிட்டாங்க. அவங்களைத் திருமணம் செய்துகொள்ள இருந்த ஹேமந்த் ரவியும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்தார். நிச்சயதார்த்ததுக்குப் பிறகு அப்பப்ப அவர்தான் சித்ராவை ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கொண்டு வந்துவிடுவார்.
அந்த எபிசோடின் ஷூட் முடிஞ்சு லேட் நைட் ஆனதாலேயோ என்னவோ வீட்டுக்குப் போகாம பக்கத்துல இருந்த நட்சத்திர ஓட்டல் ஒண்ணுல தங்கியிருக்காங்க. சித்ராவின் குடும்பமும் வருங்காலக் கணவருமே அந்த ஓட்டலில்தான் தங்கியிருந்ததாத் தெரியுது. குடும்பமா ஏன் ஹோட்டலுக்கு வந்தாங்கன்னு தெரியல. இந்தச் சூழல்லதான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் சித்ரா தற்கொலை செய்திருக்காங்க என்றார் சேனலுக்கு நெருக்கமானவர். சித்ரா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.