தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Update: 2020-12-29 15:19 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய். ரசிகர்கள் அனைவராலும்  தளபதி என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். அந்தவகையில் இவருக்கென அதிக ரசிகர்களை கொண்டவர்.

தற்போது கொரோனா ஊரடங்கிற்கு முன்னர் நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர். இப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வகையில் மாஸ்டர் திரைப்படத்தின் மாஸ் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது

திரையரங்குகளில் வாத்தி கம்மிங் 13ஆம் தேதி என்றும் அந்த டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் மோதும் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழி போஸ்டர்களும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களில் இருந்து 'மாஸ்டர்' திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும், ஜனவரி 14ஆம் தேதி இந்தியில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தளபதி விஜய்யின் ரசிகர்களுக்கு உச்சகட்ட மகிழ்ச்சியாக உள்ளது என்பதும் இதுகுறித்த ஹேஷ்டேக்குகள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

Similar News