சிம்புவின் அடுத்த படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சிம்புவின் அடுத்த படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!;
நடிகர் சிம்பு தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர். தற்போது அவரது உடல் எடையை குறைத்து அதிக படங்களில் கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் சுசீந்திரன் இயக்கத்தில் 'ஈஸ்வரன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்ட்டர் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை பொங்கல் தினத்தன்று ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் சிம்புவின் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிம்புவின் அடுத்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் 20வது படமான இந்த படத்தை கிருஷ்ணா இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் ஆரி நடித்த நெடுஞ்சாலை உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
சிம்பு உடன் இளம் ஹீரோ கௌதம் கார்த்திக் நடிக்கும் இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற "முப்தி" என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டைட்டில் வரும் 24ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது மாநாடு படத்தின் படப்பிடிப்பை முடித்த உடன் சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிகிறது.
We are glad & proud to have the trend setter of our ages @SilambarasanTR_ and the Heart throbe @Gautham_Karthik joining forces for our 20th project !!
— Studio Green (@StudioGreen2) December 23, 2020
"Sillunu oru kaadhal"s, Jillana director @nameis_krishna is the captain of this ship!#Studiogreen20 @kegvraja
Bless us! pic.twitter.com/xgxGIDstmY