'ஒத்த செருப்பு' படத்திற்கு தேசிய விருது: குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் பார்த்திபன்.!
பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரது மகளும் மகனும் படப்பிடிப்பு இடத்திற்கு சென்று கேக் வெட்டி உற்சாகமுடன் கொண்டாடியுள்ளனர்.
பார்த்திபன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு' திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரது மகளும் மகனும் படப்பிடிப்பு இடத்திற்கு சென்று கேக் வெட்டி உற்சாகமுடன் கொண்டாடியுள்ளனர்.
நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் கடந்த 2019ம் ஆண்டு 'ஒத்த செருப்பு' என்ற படத்தை இயக்கி நடித்தார். அந்த படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையில் அமைந்தது.
இந்த படத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் நேற்று வெளியானது. தமிழ் சினிமாவில், தனுஷ் நடித்த அசுரன், இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்டோருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்திற்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதோடு, இப்படத்தில் பணியாற்றிய ரசூல் பூக்குட்டிக்கும் சிறந்த ஆடியோகிராபிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதனை கொண்டாடும் வகையில், பார்த்திபனின் அடுத்தப் படமான 'இரவின் நிழல்' படப்பிடிப்பிற்கே சென்று அவரது மகள் கீர்த்தனாவும் ராக்கியும் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.