OTT தளத்தில் வெளியாகிறதா அருண் விஜயின் புதிய படம்?

Update: 2021-06-06 04:45 GMT

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாரான முழுநீள ஆக்ஷன் திரைப்படமான 'பார்டர்' திரைப்படம் தற்போது ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடிக்க ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் திரைப்படம் 'பார்டர்', அருண் விஜய்யின் 31 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடட்பட்டது. 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் இப்படத்தின் டைட்டிலான 'பார்டர்' வெளியிடப்பட்டது.


கொரோனோ இரண்டாம் அலை காரணமாக திரையரங்கில் படத்தை வெளியிட முடியாத காரணத்தினால் 'பார்டர்' படத்தையும் ஓடிடியில் ரிலீஸ் செய்வது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுத்திகிறது. இது குறித்த அறிவிப்பு தயாரிப்பாளர் தரப்பில் இருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்.

Similar News