நிவின் பாலி நடிப்பில் கனகம் காமினி கலஹம் படம் ஓ.டி.டி'யில் வெளியாக உள்ளது.
நிவின் பாலியின் தயாரிப்பு நிறுவனமான பாலி ஜூனியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தை இயக்கிய ரதீஷ் பாலகிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியிடப்படுகிறது. இதனை நிவின்பாலி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது பற்றி கூறிய அவர், "நாங்கள் அனைவரும் இணைந்து ஒரு பொழுதுபோக்கு படத்தை தர விரும்பினோம். இந்த ஸ்கிரிப்டை ரதீஷ் என்னிடம் சொன்னபோது, இந்த கடினமான கொரோனா நேரத்தில் இந்த படம் பார்வையாளர்களுக்கு ஒரு அழகான, வேடிக்கையான திரைப்படமாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். விசித்திரமான கதாபாத்திரங்கள், விசித்திரமான சூழ்நிலைகள் மற்றும் நகைச்சுவையான காட்சிகளை கொண்ட படமாக உருவாகி உள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் டிரெய்லர் விரைவில் அறிவிக்கப்படும்" எம பெருமை பொங்க கூறியுள்ளார்.