இளைஞர்களை குறிவைத்து தனது அடுத்த படைப்பை தயார் செய்யும் பா.ரஞ்சித்.

பா.ரஞ்சித்'ன் அடுத்த படம்

Update: 2021-07-30 07:15 GMT

காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷாரா விஜயன் ஆகிய மூவரையும் வைத்து புதிய படத்தை துவங்க இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.




 


'நட்சத்திரம் நகர்கிறது' என்ற பெயரில் உருவாகும் இப்படம் காதல் கதையில் உருவாகிறது. இதில் நாயகர்களாக அசோக் செல்வன், ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிக்கின்றனர். நாயகியாக துஷாரா நடிக்கிறார்.




 


 காளிதாஸ் ஜெயராம்'ன் அந்தாலஜி வகையான படம் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் 'ஓ மை கடவுளே" ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் 'சார்பட்டா பரம்பரையில்' துஷாரா விஜயன் நடிப்பு மிகவும் பேசப்பட்டு வருகிறது. இதனையடுத்து இம்மூவரையும் வைத்து இளமை ததும்பும் வகையான படத்தில் நடிக்க கதையை தயார் செய்து படத்தை துவங்கியுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.

Tags:    

Similar News