பான் இந்தியா படமாகும் சுவாமி அய்யப்பன் வரலாறு - விக்னேஷ் சிவன் துவக்கிவைத்தார்

தற்போது அதிக அளவில் ஐயப்பன் பக்தி படங்கள் தயாராகிறது. மாளிகைபுரம் என்ற மலையாளத்தில் வெளிவந்த பக்தி படம் பெரிய அளவில் வெற்றி அடைந்திருக்கிறது.

Update: 2023-01-19 14:12 GMT

தற்போது அதிக அளவில் ஐயப்பன் பக்தி படங்கள் தயாராகிறது. மாளிகைபுரம் என்ற மலையாளத்தில் வெளிவந்த பக்தி படம் பெரிய அளவில் வெற்றி அடைந்திருக்கிறது. இந்த வரிசையில் ராஜு வைத்யா இயக்கத்தில் சன்னிதானம் பி.ஓ. என்ற படம் தமிழில் தயாராகிறது. இந்த படத்தில் யோகி பாபு மற்றும் பிரமோத்ஷெட்டி இருவரும் முக்கிய வேடங்களின் நடிக்கிறார்கள். சர்வதேச சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா க்ரியேஷன் சார்பில் மதுசூதன் ராவ் மற்றும் சபீர் பஜான் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

சபரிமலை சன்னிதானத்தில் இப்படத்தின் துவக்க விழா பூஜை மகரவிளக்கு ஜோதி தினத்தன்று நடைபெற்றது. திருவிதாங்கூர் தேவசம் போர்க்கின் தலைவரான அட்வகேட் அனந்த கோபன் இந்நிகழ்ச்சியில் தலைமை வைத்தார் மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கிளிப் அடித்து விழாவை துவக்கி வைத்தார்.

இந்த படம் சபரிமலை சன்னிதானம், அங்கே பணிபுரியும் டோலி தூக்கும் பணியாளர்கள் மற்றும் சன்னிதானத்தில் அமைந்துள்ள போஸ்ட் ஆபீஸ் இவற்றை பின்னணியாக வைத்து உருவாகிறது. மேலும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது.

Similar News