டிசம்பரில் நடக்க இருக்கும் 'பஞ்சு 80' - ரஜினி, கமல் பங்கேற்கிறார்கள்
பஞ்சு அருணாச்சலத்திற்கு பிரம்மாண்ட விழா நடைபெற இருக்கிறது.
பஞ்சு அருணாச்சலத்திற்கு பிரம்மாண்ட விழா நடைபெற இருக்கிறது.
தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன் என போற்றப்பட்டவர் மறைந்த பஞ்ச அருணாச்சலம். இவர் ரஜினி, கமல் ஆகியோரை வைத்து பல படங்கள் இயக்கி உள்ளார். மேலும் இசையமைப்பாளர் இளையராஜாவை அறிமுகப்படுத்தியதும் இவர்தான். பஞ்சு அருணாச்சலத்தின் 80'வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக டிசம்பர் இரண்டாம் தேதி சென்னையில் 'பஞ்சு 80' என்ற பெயரில் பிரம்மாண்ட விழா கொண்டாடப்படுகிறது.
இதை அவரது மகனும் நடிகருமான சுப்பு பஞ்சு முன்னெடுத்து நடத்துகிறார். அதில் இளையராஜா, பாரதிராஜா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் ரஜினிகாந்த், கமலஹாசன் அனைவரும் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. மேலும் திரை உலகில் உள்ள பலரும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். பிரம்மாண்ட முறையில் இந்த விழா நடக்க இருக்கிறது.