விருதுகள், நாமினேஷன்கள் - இந்திய சினிமாவிற்கு 'இரவின் நிழல்' மூலம் பெருமை சேர்க்கும் பார்த்திபன்
மூன்று சர்வதேச விருதுகள், இரண்டு நாமினேஷன்களை பெற்று பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்து வருகிறது.
மூன்று சர்வதேச விருதுகள், இரண்டு நாமினேஷன்களை பெற்று பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்து வருகிறது.
நடிகரும், இயக்குனருமான பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் ஜூலை 15'ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது, ஆனால் படம் வெளி ஆவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளையும், இரண்டு பரிந்துரைகளையும் பெற்றுள்ளது.
மூன்று விருதுகளில் இரண்டு விருதுகள் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆத்தர் ஏ வில்சனுக்கும், ஒரு விருது படத்துக்கும் கிடைத்துள்ளது. இப்படி இந்திய சினிமாவை அடுத்த உயரத்திற்கு எடுத்து சென்ற பார்த்திபனை வருகின்றனர்.