பவன் கல்யாண் பிறந்தநாள் ஸ்பெஷல் ஷோ - திரையரங்கை அடித்து உடைத்த ரசிகர்கள்

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் பவன் கல்யாண் பிறந்தநாள் சமீபத்தில் தெலுகு திரையுலகில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.

Update: 2022-09-06 06:38 GMT

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் பவன் கல்யாண் பிறந்தநாள் சமீபத்தில் தெலுகு திரையுலகில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.


 



அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து ஹிட் படமான ஜல்ஸா சில திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. குறிப்பாக விஜயவாடாவில் உள்ளது திரையரங்கு ஒன்றில் இந்த படம் திரையிடப்பட்ட பொழுது ரசிகர்கள் கொண்டாட்டம் என்கின்ற பெயரில் திரைகள் கிழித்து, நாற்காலிகளை அடித்து உடைத்தனர்.




 

மேலும் திரையரங்கில் உள்ள உள்ள பொருட்கள் எல்லாவற்றையும் அடித்து உடைத்ததால் திரையரங்கம் சின்னாபின்னமாகியது. கொண்டாட்டத்திற்காக ஒரு நாள் ரசிகர்கள் செய்த அட்டூழியம் தியேட்டருக்கு 20 லட்ச ரூபாய் நஷ்டம் என திரையரங்கின் மேலாளர் தெரிவித்துள்ளார்.

Similar News